» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் முதலீட்டு மோசடி: ரூ.75 லட்சம் சுருட்டிய வாலிபர் கைது - மேலும் 5பேருக்கு போலீஸ் வலை!
சனி 8, ஆகஸ்ட் 2026 9:09:29 AM (IST)
தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவன மேலாளரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் இவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு வந்த விளம்பர லிங்க் ஒன்றில், "குறைந்த முதலீட்டில் 200% அதிக லாபம் பெறலாம்" எனக் கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது.
இதனை நம்பி அவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளனர். அக்குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய அப் பாதிக்கப்பட்ட மேலாளர், சிறுகச் சிறுக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு லாபத் தொகை எதுவும் வராததால், தனது கணக்கிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது பணம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாகச் சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாகவும், வங்கி கணக்குகளைச் செயல்படுத்த உதவியாகவும் இருந்த ஏரல் அருகே உள்ள பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (32) என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரைச் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)



muralee;palaniappaAug 8, 2026 - 12:39:36 PM | Posted IP 172.7*****