» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தந்தை திட்டியதால் விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:53:23 PM (IST)

தந்தை திட்டியதால் மனமுடைந்து களைக்கொல்லி விஷம் அருந்திய இளைஞர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவரின் மகன் வரதராஜன் (22). இவர் கடந்த 9-ஆம் தேதி தந்தை கண்டித்ததால் மனவேதனையடைந்த வரதராஜன், தோட்டத்தில் இருந்த களைக்கொல்லி நஞ்சைக் குடித்துள்ளார்.

உடனடியாக அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வரதராஜன், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

Naan thaanAug 15, 2026 - 12:31:45 PM | Posted IP 162.1*****

appaa thittaama, pesaama irunthaa thaan daa prachanai.. ellarum ellarayum thitta maataanga .. 2k kid la athaan purinjukala pola, So sad ra.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory