» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் மனைவியைப் பிரிந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 10:59:08 AM (IST)

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துத் திருமணம் செய்த வாலிபர் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி டிஎம்பி காலனி 6-வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி - உச்சிமாகாளி தம்பதியின் மகன் மாரிமுத்து (26). தச்சுத் தொழில் செய்து வந்தார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது பெண்ணை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். 

மனைவியுடன், முள்ளக்காட்டில் உள்ள பெரியம்மா வீட்டில் வசித்து வந்தபோது, மனைவி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி வருவதாக மாரிமுத்துவிற்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கடந்த ஒரு வாரமாக அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், மாரிமுத்துவிற்கு நேற்று இரவு அவரது தாய் சாப்பாடு கொண்டு வந்துள்ளார். கதவைத் திறந்து பார்த்தபோது, அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் மாரிமுத்து தூக்கிட்டுத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

naan thaanAug 15, 2026 - 11:10:19 AM | Posted IP 172.7*****

so sad...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory