» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!

சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தினுள்ளேயே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பிற்கு வந்த சில மாணவிகள், வகுப்புகள் முடிந்து மற்ற மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவி ஒருவரின் ஆண் நண்பர் ஒருவர், அந்த மாணவிகளுக்கு மதுபாட்டில்கள் மற்றும் உணவுகளை வாங்கி வந்து கொடுத்து உதவியதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு வெளிப்பட்டதைத் தொடர்ந்து, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தக்கலை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் வந்தது மற்றும் மாணவிகளுக்கு எளிதாக போதைப்பொருட்கள் கிடைத்தது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளிலும், அப்பகுதிகளிலும் கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்துக் காவல் துறையும், உணவுப் பாதுகாப்புத் துறையும் இணைந்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆனந்த்Aug 16, 2026 - 12:06:18 PM | Posted IP 162.1*****

அந்த ஆண் நண்பர் தலைமை ஆசிரியராக இருப்பாரோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory