» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)

spTeachersmeeting.jpg

தூத்துக்குடியில், மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து 350 ஆசிரியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

எஸ்பி வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்: மாணவர்களிடையே போதைப்பொருட்களினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சீரான முறையில் சீருடை அணிவது, தலைமுடியைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஒழுக்க விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்கள் சாதிகளைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான கயிறுகள் அணிவதைத் தவிர்க்க ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடையே மோதல்கள் அல்லது பிற பிரச்சினைகள் எழுந்தால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். சீருடை அணியாத காவலர்கள் மூலம், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் எனத் கேட்டுக்கொண்ட எஸ்பி, போதைப்பொருள் பயன்பாடு குறித்துத் தகவல் தெரிந்தால் 8300014567 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory