» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)

ஆத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'ஆன்மா' அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவில், கதிர்வேல் வரவேற்புரையாற்றினார். பாபுசரவணன் தலைமை வகித்து அமைப்பின் செயல்திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார். மீனாட்சி சுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவுக்கு கங்கா கெளரி முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக டிசிடபிள்யூ மூத்த செயல் உதவித் தலைவர் சீனிவாசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்.
55 பேருக்கு நோட்டுப் புத்தகங்களும், 100 பேருக்கு இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. 25 பேருக்குச் சுமார் ரூ.55,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் நிதி உதவிகள் அளிக்கப்பட்டன.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான மேசைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாகச் சுமார் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தெற்கு ஆத்தூர் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆன்மா அமைப்பின் உறுப்பினர்களான பொன்சரவணன், நார்தா கிருஷ்ணன், மாரியப்பன், கந்தசாமி, கணபதி, ராமலிங்கம், முத்துக் கிருஷ்ணன், கணபதி ராமலிங்கம், வெங்கடேஷ், ராமநாராயணன், சண்முகசுந்தரம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக முத்துராஜ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)


