» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் நவ.25ல் சீருடை பணியாளர் மாதிரி தேர்வு: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 21, நவம்பர் 2023 5:36:12 PM (IST)
நாகர்கோவிலில் வருகிற 25ஆம் தேதி சீருடை பணியாளர் தேர்வாணை தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம்நிலை காவலர்/ இரண்டாம் நிலை சிறைக்காவலர்/தீயணைப்பாளர் போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரித்தேர்வு 25.11.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து நடத்தப்படவுள்ளது.
காலை 10.00 மணி முதல் 01.00 வரை இரு தேர்வுகளாக (தமிழ் தகுதித்தேர்வு மற்றும் இரண்டாம்நிலை காவலர்/ இரண்டாம் நிலைசிறைக்காவலர் / தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு)நடைபெற உள்ள இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், நாகர்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இவ்வலுவலக Telegram சேனலான DECGCNGL இல் உள்ள Google Form இலோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்கு கடைசி நாள் 24.11.2023 ஆகும்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு நடைபெறும் நாளான 25.11.2023 அன்று காலை 9.30 மணியளவில் இரண்டாம்நிலை காவலர்/ இரண்டாம்நிலைசிறைக்காவலர்/தீயணைப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்-1, ஆதார் நகல்-1, புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செயற்கை கருத்தரிப்பு குழந்தைகளின் சங்கமம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 8:04:55 PM (IST)

திட்டமிடாத திமுக அரசால் மக்கள் இன்னலை சந்திக்கின்றனர்: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:46:40 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.17 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:27:49 PM (IST)

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்: நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:56:50 PM (IST)

2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்! - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:44:11 PM (IST)

அதிமுகவில் சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:42:54 PM (IST)
