» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது!

சனி 2, மார்ச் 2024 12:45:04 PM (IST)

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகின்றது.

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமல்லாமல் நெய், தயிர், பால் பௌடர், பாதாம் பௌடர், குல்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள், குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் ஆவினில் பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில், ஆவின் சார்பின் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 65 மி.லிட்டர் சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், வென்னிலா ரூ.28 முதல் ரூ.30 ஆகவும், கிளாசிக் கோன் வென்னிலா மற்றும் கிளாசிக் கோன் சாக்லேட் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory