» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது

திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர். 

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர். 

இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory