» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை: மத்திய அரசுக்கு பாஜக நன்றி!!

புதன் 17, ஜூலை 2024 10:47:01 AM (IST)

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசுக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வரை வாரம் இரண்டு முறையும், திருநெல்வேலி பாலக்காடு பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு ஆகிய கோரிக்கைகளை நமது ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதனை விரைவுபடுத்தி தர வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தோம். 

இந்நிலையில் முதற்கட்டமாக வருகிற 19.07.2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேட்டுப்பாளையம் தூத்துக்குடி ரயில் சேவையை வாரம் இரண்டு முறை மத்திய இணை அமைச்சர் முருகன் மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையத்திலிருந்து துவக்கி வைக்கிறார். 

நாங்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக ஒப்புதல் வழங்கிய பாரத பிரதமர் நரேந்திரமோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

TUTY MAKKALJul 19, 2024 - 03:47:29 PM | Posted IP 162.1*****

CONGRATS TO BJP AND CENTRAL GOVERNMENT

RajanJul 19, 2024 - 10:19:19 AM | Posted IP 162.1*****

Maniyachi by-pass மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டால் இன்னும் அதிக ரயில்கள் வர வாய்ப்புள்ளது

PremJul 19, 2024 - 09:09:14 AM | Posted IP 172.7*****

need daily train from thoothukudi to chennai, thoothukudi to mumbai weekly. palrruvi express. madurai division has to give more priority to passenger services from thoothukudi.

RohitJul 18, 2024 - 10:20:17 PM | Posted IP 162.1*****

பொள்ளாச்சிக்கு 30 வருசத்துக்கு முன்னாடியே தூத்துக்குடியில இருந்து ரயில் தினசரி இயக்கபட்டது இப்ப வாரத்தில 2 நாள்தான் என்பது ரொம்ப மோசம் வளரும் நகரம் தூத்துக்குடி.

கார்த்திகேயன்Jul 18, 2024 - 07:24:26 PM | Posted IP 172.7*****

தெற்கு மண்டலம் மேற்கு மண்டலம் 2ம் எளிதில் இணைய இது அவசியமே... இதே போல பழைய வழித்தடத்தில் இருந்த வண்டிகளை மீட்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory