» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 18, அக்டோபர் 2024 12:13:39 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் வெங்கடேசன் (50) என்பவரை கடந்த 03.04.2021 அன்று முன்விரோதம் காரணமாக சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி ஏரல் புதுமனை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து (45) மற்றும் தூத்துக்குடி சாயர்புரம் பெரும்படை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த  சங்கரநாராயணன் மனைவி பார்வதி (40) ஆகியோரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த வஷித்குமார் நேற்று இவ்வழக்கின் குற்றவாளிகளான இசக்கிமுத்து மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா, மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேது, விசாரணைக்கு உதவியாக காவலர் சுரேஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory