» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை படைத்த இளைஞருக்கு மேயர் பாராட்டு!

வெள்ளி 19, ஜூலை 2024 3:21:09 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ள இளைஞருக்கு மேயர்  ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, கடந்த 15ஆம் தேதி 30 கிலோ எடையை முதுகில் சுமந்தபடி ஒரு மணி நேரம் 376 முறை ஷிப்பிங் செய்து உலக சாதனை படைத்தார். மேலும் கராத்தே தற்காப்பு கலையில் பயன்படுத்தப்படும் நிஞ்சாக் எனும் தற்காப்பு ஆயுதத்தை  ஒரு மணி நேரம் இரண்டு கைகளால் சுழற்றியபடியும் பின்னர் 34 நிமிடம் ஒரு கையால் நிஞ்சாக் தற்காப்பு ஆயுதத்தை சுழற்றியபடி உலக சாதனை படைத்துள்ளார்.

இவரது இந்த சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.சாதனை படைத்த இளைஞரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சாதனை இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சாதனை மாணவனுக்கு சால்வை மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவ படுத்தியதுடன் அவரை சாதனையை பாராட்டினார்.  

மேலும் சாதனை மாணவனை ஊக்கப்படுத்திய அவரது பெற்றோர்களையும் மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார். பின்னர் சாதனை இளைஞர் ஆர்யா கூறுகையில் இளைஞர்கள் பல்வேறு சாதனை  படைக்க ஊக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறு இந்த உலக சாதனை படைத்ததாக கூறிய ஆர்யா மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க உள்ளதாக தெரிவித்தார்.  நிககழ்ச்சியில் அவரது பெற்றோர் முத்துசாமி - ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory