» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்ஜெட் எதிரொலி: 3-வது நாளாக இறங்கு முகத்தில் தங்கம் விலை!

வியாழன் 25, ஜூலை 2024 11:52:08 AM (IST)

இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம், வெள்ளி விலை இன்று 3-வது நாளாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. 

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ,275-ம், பவுனுக்கு ரூ,2 ஆயிரத்து 200-ம் குறைந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை இறங்குமுகத்திலேயே இருந்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.51,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு 3-வது நாளாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3,040 ஆக குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory