» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்கு அ.தி.மு.க. ரூ.1 கோடி நிதியுதவி
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:05:04 AM (IST)
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பலர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச்சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அ.தி.மு.க. சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டம் புதிய அத்தியாயம் படைத்துள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:22:23 PM (IST)

முதல்வர் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 19, பிப்ரவரி 2025 12:27:35 PM (IST)

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 12:22:43 PM (IST)

வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் மறுப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:05:05 PM (IST)

வீண் பெருமை பேசாமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் : அன்புமணி காட்டம்!
புதன் 19, பிப்ரவரி 2025 11:06:00 AM (IST)
