» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: ஜி.கே. வாசன் பேட்டி!

திங்கள் 16, செப்டம்பர் 2024 11:11:32 AM (IST)



"ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்று கூட்டணி கட்சியினர் நினைப்பது தவறு கிடையாது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணமாக தான் இருக்க முடியும்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை அதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று எந்த கட்சி நினைத்தாலும், இந்த காலத்தில் அது தவறு கிடையாது. அதையும் தாண்டி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலக்கை அடைய முடியும்.

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் மது ஒழிப்பதில் உறுதியாக உள்ளனர். த.மா.காவை பொருத்தவரை மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையில் உறுதிபட உள்ளது. மது இல்லா தமிழகம் என்ற ரீதியில் ஒரு கோடி கையெழுத்தை வாங்கி ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம் என்றார்.

முன்னதாக ஜி.கே. வாசனுக்கு த.மா.கா. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில், மத்திய மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன், மாநில இணைச் செயலாளர் திருப்பதி, மாநகர தலைவர் ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் மாறன், மத்திய மாவட்ட  துணை தலைவர் பெஸ்கி, செயலாளர் கஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory