» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு: அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!
புதன் 18, செப்டம்பர் 2024 11:57:03 AM (IST)
நாகூரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
மேலும் அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நாகை மாவட்ட ஆட்சியரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. நேற்று உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஆளுநருடன், மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
என்னதுSep 18, 2024 - 06:40:45 PM | Posted IP 162.1*****
படிப்பறிவில்லாத முட்டாள் திருட்டு அரசியல்வாதிகள் சொத்து குவிப்பு குற்றவாளிகளுக்கு எதுக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கணும் ?
TamilanSep 18, 2024 - 03:57:41 PM | Posted IP 172.7*****
arasiyal vathigal arasiyal seyyalam....maavatta atchiyarum arasiyal seyyalama?
இளந்தமிழன்Sep 19, 2024 - 07:40:02 AM | Posted IP 172.7*****