» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லிப்ட் கொடுத்து நகை, செல்போன் பறிப்பு : 2பேர் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!!!

திங்கள் 16, செப்டம்பர் 2024 11:35:31 AM (IST)

தூத்துக்குடியில் முதியவருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்து நகை, செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.   

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன் விளை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் ஜெயசிங் சாமுவேல் (69), இவர் சென்னையில் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் பஸ்ஸில்  தூத்துக்குடிக்கு நேற்று இரவு 11 மணிக்கு வந்தார் வந்தார். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2பேர்,  அவருக்கு லிப்ட் கொடுத்து பழைய பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் மாலை அணிந்திருந்தார்களாம். இதனால் அவர்களை நம்பி ஜெயசிங் சாமுவேல் அவர்களது பைக்கில் ஏறியுள்ளார்.  தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை, முத்தையாபுரம் அடுத்துள்ள பொட்டல்காடு அருகே செல்லும்போது திடீரென உப்பள பகுதிக்குள் சென்றது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசிங் சாமுவேல் பைக்கில் இருந்து இறங்க முயற்சித்தார். அப்போது பைக் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் அவரிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து ஜெயசிங் சாமுவேல் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவை சேர்ந்த ஜான்சன் மகன் பாம்பு ஆனந்தகுமார் (26), சுரேஷ் மகன் சிவா (27), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மோதிரம், செல்போன் மற்றும் அவர்களது பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

ThoothukudiSep 17, 2024 - 09:12:29 AM | Posted IP 172.7*****

திருட்டு நாயோட அப்பன் பேரு ஜான்சன் ஆனா மாலை போட்டு இருபானாம். இந்துக்கள் பற்றி பேச வேண்டாமே Mr.பாதிக்கப்பட்டவன்

பாதிக்கப்பட்டவன்Sep 16, 2024 - 12:04:00 PM | Posted IP 172.7*****

இவர்கள் போன்ற இந்துக்களால் சில இந்துக்கள் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மாறுகின்றனர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory