» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரஜினி நடித்துள்ள வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
புதன் 9, அக்டோபர் 2024 3:50:12 PM (IST)
ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. காவல்துறை என்கவுன்டரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் நாளை (அக்.10) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து அக்டோபர் 10-ம் தேதி ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.