» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து: கல்வித்துறை இயக்குநர்

செவ்வாய் 26, நவம்பர் 2024 3:44:54 PM (IST)

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தண்டனை, கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணிரத்து மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரை செய்வது போன்ற நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகல் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு வழிமுறைகள் குறித்து காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும், மாணவர்கள் புகார் அளிக்க பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விடியோக்களை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்சிசி, ஜேஆர்சி, சாரண சாரணியர் இயக்கம் போன்றவையும் செயல்படும் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory