» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
புதன் 27, நவம்பர் 2024 12:07:26 PM (IST)
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 48வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அவரை உச்சிமுகர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்கள் நலப் பணிகளைச் செய்து கொண்டாடி வருகின்றனர். தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.