» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 27, நவம்பர் 2024 12:55:20 PM (IST)


ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது கடந்த 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இதற்கு முன்பு வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக, வொண்டர் பார்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை வந்தது.

அந்த விசாரணையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory