» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை புத்தககண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் வெளியிடு!

வியாழன் 22, ஜனவரி 2026 4:07:25 PM (IST)


சென்னை புத்தககண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல். பெரும் எதிர்பார்ப்புடன் இந்த நூல் வெளியாகி உள்ளது. 

தாமிரபரணியை சாக்கடையில் இருந்து மீட்க வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருபவர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் வழக்கிற்காக கடந்த வாரம் இந்தியாவின் நீர்மனிதர் என போற்றப்படும் ராஜேந்திர சிங் அவர்களை மதுரை உயர்நீதி மன்றம் அணையராக நியமித்துள்ளது. 

இவர் தாமிரபரணியை சுற்றி பார்த்து அறிக்கையை உயர்நீதி மன்றத்துக்கு தரவுள்ளார். இந்த நிலையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நீர்மம் நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல் சுரண்டப்படும் தாமிரபரணியின் கதை சொல்லும் முதல் நாவல் என தலைப்பிட்டு வெளியாகி உள்ளது. எனவே இந்த நூல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. 

கடந்த மாதம் இந்த நூலின் அறிமுகத்தினையொட்டி அட்டைப்படத்தினை தூத்துக்குடியில் இருந்து தங்களது தலைமை ஆசிரியர் பண்டாரம்பட்டி பொன்ராஜ் அவர்கள் செலவில் சென்ற சென்னைக்கு பள்ளி மாணவ மாணவிகள் மூலம் வெளியிட்டு கவனம் பெற்றது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு தினமும் புதிய தலைமுறையின் கவனம் ஈர்த்த ஐந்து நூல்களில் என்ற வரிமையில் நீர்மமும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நூல் நாற்கரம் பதிப்பக அரங்கில் வைத்து வெளியிடப்படடது. இந்த நூலை பாண்டிச்சேரி முன்னாள் செயலாளர் சுந்தரேசன் அவர்கள் வெளியிட அயோத்திப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். 

ராட்டினம் இயக்குனர் தங்கசாமி தலைமை தாங்க திரைப்பட வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் முகில், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தாமரை பிரதர்ஸ் மேலாளர் ரவி, ஊடகவியாளர் மற்றும் சொற்பொழிவாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் பொன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிப்பாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் டாப் டிவி ராஜா, திரைப்பட துணை இயக்குனர் கற்குவேல், சித்த மருத்துவர் பொன் மணி, பொன் ரவி, ஸ்டெல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பதிப்பாளர் நல்லு லிங்கம் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory