» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)


தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொதுச் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெகவினர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory