» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது!

திங்கள் 30, டிசம்பர் 2024 4:53:23 PM (IST)



கோவில்பட்டியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ உள்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
 
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தமிழக அரசினை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் இன்று நடைபெறும் என்று அதிமுக அறிவித்து இருந்தது. 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு GO BACK முதல்வர் மு.க.ஸ்டாலின் - யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உள்பட 200க்கும் மேற்பட்டவர்களை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory