» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் ரூ.37 கோடியில் கண்ணாடி பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 30, டிசம்பர் 2024 5:52:05 PM (IST)



கன்னியாகுமரியில் திருள்ளுவர் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படும். இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து பாலம் அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதை நிறைவேற்றும் வகையில், ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம் 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். 

கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், விவேகானந்தர் பாறை முகப்பு வரை சென்று திரும்பினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory