» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டார்.

திங்கள் 6, ஜனவரி 2025 4:45:24 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் 779963 ஆண்கள், 783475 பெண்கள், 144 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1563582 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி 01.01.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 தொடர்பாக, இறுதி வாக்காளர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களால் இன்று (06.01.2025) அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர்களின் விபரம் கீழ்கண்டவாறு உள்ளது. இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025-ன் படி கீழ்க்கண்டவாறு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டு இறந்த, இடம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் (06.01.2025) இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் விபரம் கீழ்க்கண்டவாறு வெளியிடப்பட்டது. 

கன்னியாகுமரி தொகுதியில் 146640 ஆண்கள், 150216 பெண்கள், 78 என மொத்தம் 296934 வாக்காளர்களும், நாகர்கோவில் தொகுதியில் 130854 ஆண்கள், 134990 பெண்கள் இதரர் 11 என மொத்தம் 265855 வாக்காளர்களும், குளச்சல் தொகுதியில் 136601 ஆண்கள், 134016 பெண்கள், இதரர் 13 என மொத்தம் 270630 வாக்காளர்களும் பத்மனாபபுரம் தொகுதியில் 121688 ஆண்கள், 121226 பெண்கள், இதரர் 22 என மொத்தம் 242936 வாக்காளர்களும், விளவங்கோடு தொகுதியில் 118503 ஆண்கள், 120556 பெண்கள் இதரர் 1 என மொத்தம் 239060 வாக்காளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 125677 ஆண்கள், 122471 பெண்கள், இதரர் 19 என மொத்தம் 248167 வாக்களார்களும் உள்ளனர். மாவட்டத்தில் 779963 ஆண்கள், 783475 பெண்கள், 144 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1563582 வாக்காளர்கள் உள்ளனர். 

கடந்த மக்களவை தேர்தல் 2024ன் படி மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1698. தற்போதுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1702. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகதியில் புதிதாக 2 வாக்குசாவடி மையம் மற்றும் பத்மறாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குசாவடி மையம் என மொத்தமாக 4 வாக்கு சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), சஜித் (கல்குளம்), ஜூலியன் ஹீவர் (விளவங்கோடு), ராஜசேகர் (கிள்ளியூர்), கந்தசாமி (திருவட்டார்), தேர்தல் துணை வட்டாட்சியர்கள் குமார், ரியாஸ் அகமது, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory