» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெங்களூர்- தூத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 7:51:28 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துாத்துக்குடி - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

வண்டி எண். 06569 SMVB பெங்களூர்- தூத்துக்குடி ரயில்: பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து 10-01-2025 வெள்ளிக்கிழமை இரவு 10-00 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11-00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயிலட் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

வண்டி எண். 06570 தூத்துக்குடி- மைசூர் ரயில்: தூத்துக்குடியில் இருந்து 11-01-2025. சனிக்கிழமை மதியம் 01-00 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 06-30 மணிக்கு மைசூர் சென்றடையும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர், மாண்டியா, எளியூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். 

வண்டி எண். 06569 பெங்களூர்- தூத்துக்குடி ரயிலுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. வண்டி எண். 06570 தூத்துக்குடி-மைசூர் ரயிலுக்கான முன்பதிவு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. நாளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சிறப்பு ரயிலை இயக்கியமைக்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory