» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது!
புதன் 8, ஜனவரி 2025 10:49:20 AM (IST)
ஸ்ரீவில்லிபுதூரில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் ராஜேஷ் (40). இவர் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து தலைமை ஆசிரியர் ராஜேஷை நேற்று கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுதாகர், தலைமை ஆசிரியர் ராஜேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.