» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்: ஆட்சியர், மேயர் பங்கேற்பு!

வியாழன் 9, ஜனவரி 2025 10:51:14 AM (IST)



மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு எந்த வித நெருக்கடி இல்லாமல் இயல்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வாங்கிக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம், சைதாப்பேட்டை, சின்னமலை நியாய விலைக் கடையில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், குமாரகிரி ஊராட்சி,கூட்டாம்புளி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டாம்புளி பொதுவிநியோகக் கடையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் மூன்று பொருட்கள் கொடுக்கப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ, சீனி ஒரு கிலோ, முழு கரும்பு ஒன்று ஆகியவற்றை நாம் கொடுக்கிறோம். நமது மாவட்த்தில் 957 நியாய விலைக்கடைகள் மூலம் 5,42,432 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். அதில் 5,30,761 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் கொடுக்கப்படுகிறது.

கூட்டாம்புளி கிராமத்தில் 1342 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் இன்று கொடுக்கிறோம். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்போடு சேர்த்து பொங்கலுக்கான வேட்டி சேலைகளும் வந்திருக்கின்றன. வேட்டி, சேலைகளையும் பொது விநியோகக் கடைகள் மூலமாக வழங்கி கொண்டிருக்கிறோம். வருகின்ற 30 தேதி வரை வேட்டி, சேலைகள் வழங்கப்படும். ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பானது பொங்கலுக்கு முன்னதாகவே அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கிறோம். இதற்காக நமது பொது விநியோகக் கடைகளில் இருக்கக்கூடிய நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறைகளில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நபர்களுக்கும் எந்த நாளில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன்கள் குடுத்திருக்கும் நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளோம். எனவே மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு எந்த வித நெருக்கடி இல்லாமல் இயல்பாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.



தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன், வட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன் மற்றும் வட்ட பிரதிநிதி அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory