» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? சீமான் கேள்வி

வியாழன் 9, ஜனவரி 2025 3:56:37 PM (IST)

வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூகச் சீர்திருத்தம் என்ன? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை ஒன்றாக ஒப்பிடுவது எப்படி சரியாகும்? என்று சீமான் கேள்வி எழுப்பினார். 

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழர்... தமிழர்கள் என்று பேசினால் எதிரியா?.. யார் திராவிடம். நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை. திராவிடம் பேசி, எங்களை ஒழித்துவிட்டார்கள். தமிழை சனியன் என்று பேசியவர் பெரியார். இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர்கள் என பெரியார் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரியா?

எல்லா தேசிய இனத்திற்கும் வரலாறு, பண்பாடு தருவது மொழி தான். வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூகச் சீர்திருத்தம் என்ன? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? காலத்திற்கு ஏற்றது போல் மாற வேண்டும். பெரியார் குறித்த பேச்சுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். பெரியார் குறித்து கலைஞர் எழுதிய புத்தகங்களை அரசுடமையாக்கி வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்கின்றனர். திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன், தற்போது தெளிவு வந்துவிட்டது என்றார்.

இதனிடையே பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை துணை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். சீமான் மீது தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory