» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்

வியாழன் 9, ஜனவரி 2025 12:14:25 PM (IST)

பெரியார் குறித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். 

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தன் பெயர் அடையாளப்படும் என்று இவ்வாறு செய்கிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் நல்லது. தலைவர்களை கொச்சைப்படுத்துவது சீமானுக்கு சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சென்னையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமானை கண்டித்து நீலாங்கரையில் அவரது வீட்டை முற்றுகையிட வந்த த.பெ.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory