» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இஸ்ரோவின் புதிய தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

புதன் 8, ஜனவரி 2025 11:38:28 AM (IST)



இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோமநாத்தின் பதவிக்காலம் ஜன.14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக நாராயணன் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் 2 வருடங்கள் அந்த பதவியில் இருப்பார்.இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

Chandrayaan2, Chandrayaan3, AdityaL1, Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணன் அவர்களின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory