» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவில் இருந்து குமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேர் கைது: லாரி பறிமுதல்

வியாழன் 9, ஜனவரி 2025 8:17:34 AM (IST)

கேரளாவில் இருந்து குமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் குமரியில் கொட்டப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே சமீபத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டுவரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. 

பின்னர் இந்த மருத்துவக்கழிவுகளை கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் இருந்து குமரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு கழிவுகளை கொட்ட வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக குமரி மாவட்டத்திற்குள் காய்கறி கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் வந்த போது அங்கு சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசாரிடம் காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிக்கியது. 

பின்னர் போலீசார் லாரியை ஓட்டி வந்த பணகுடி பகுதியை சேர்ந்த சிவா (29), கிளீனர் மணிகண்டன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் லாரி உரிமையாளரான வள்ளியூரை சேர்ந்த ஜோஸ்வா (35) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் காய்கறி கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி அனுப்பிய நபர் யார்? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory