» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் : எம்பவர் இந்தியா கோரிக்கை!!
செவ்வாய் 7, ஜனவரி 2025 11:51:23 AM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கெளரவ செயலாளர் ஆ.சங்கர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எக்ஸ் வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.