» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பணி இடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 6, ஜனவரி 2025 8:16:04 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம், தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சிகிச்சைகள் மையத்தில் (DEIC) Special Educator for Behavioural Therapy-1, Occupational Therapists-1 Social Worker - 1 என மூன்று புதிய ஒப்பந்த பணியிடங்களும், முட்டம் மற்றும் செண்பகராமன்புதூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இரண்டு இயன்முறை மருத்துவர்கள் என மொத்தம் ஐந்து பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

1. Special Educator for Behaviour Therapy - 1 பணியிடம்

2. Occupational Therapists - 1 பணியிடம்

3. Social Worker - 1 பணியிடம்

4. இயன்முறை மருத்துவர் (Physiotherapists) - 2 பணியிடம்

இப்பணியிடத்தினை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.Kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.01.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory