» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் பெயரில் 'ரீசார்ஜ்' அறிவிப்பு : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வெள்ளி 10, ஜனவரி 2025 11:58:52 AM (IST)



முதல்வர் ஸ்டாலின், 3 மாத ரீசார்ஜ், வழங்க இருப்பதாக சமூக வலை தளங்களில் பரவும் வதந்தி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரிலும், மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள் வாயிலாக இணைய 'லிங்க்' அனுப்பும் சைபர் கிரைம் குற்றவாளிகள், அந்த 'லிங்க்' வாயிலாக உள் நுழையும் பொது மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை களவாடி விடுகின்றனர்.

சமீபத்தில், பிரமதர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அரசு திட்டங்களை குறிப்பிட்டும் இதபோன்ற மோசடிகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், 'புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை' என்ற தலைப்புடன், 'புத்தாண்டையொட்டி ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக்குறிப்பிட்டு, ஒரு 'இணைய லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 'லிங்க்'கில் நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்; கவனமுடன் இருக்க வேண்டும்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory