» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)
இரணியல் அருகே ஏழு நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அழுகிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரங்காடு, மொட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பச்சைமால். இவரது மகன் தர்மலிங்கம் (51). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தர்மலிங்கத்தின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தர்மலிங்கம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். உடல் புழுக்கள் அரித்து, துர்நாற்றம் வீசியதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மருத்துவ அணிச் செயலாளர் அசார் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சடலத்தை மீட்டு, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தர்மலிங்கம் உயிரிழந்து சுமார் ஏழு நாட்கள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தவெக திட்டவட்டம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:01:58 PM (IST)

பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள்: சட்டம் ஒழுங்கு சீரழிவு - பாஜக விமர்சனம்!
திங்கள் 16, மார்ச் 2026 3:57:30 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

மதுகுடிக்கப் பணம் கேட்டுத் தகராறு: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது!
திங்கள் 16, மார்ச் 2026 11:22:22 AM (IST)

ஊருணியில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு : நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!
திங்கள் 16, மார்ச் 2026 8:30:48 AM (IST)

