» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி : சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்!

வெள்ளி 10, ஜனவரி 2025 5:42:42 PM (IST)

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும். வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory