» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு
சனி 11, ஜனவரி 2025 11:13:51 AM (IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திமுக போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார் என கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் ஏற்கேனவே தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)
