» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேர் பிரிட்டிஷ் கடற்படையினரால் கைது!
திங்கள் 13, ஜனவரி 2025 12:53:54 PM (IST)
டிக்கோகார்சியா தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை பிரிட்டிஷ் கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வரும்நிலையில், குமரியை சேர்ந்த 10 மீனவர்கள் தற்போது பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. .
இதன்படி டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை பிரிட்டிஷ் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட ஆமாலJan 13, 2025 - 02:34:43 PM | Posted IP 162.1*****