» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் : அண்ணாமலை வாழ்த்து
வியாழன் 16, ஜனவரி 2025 5:03:01 PM (IST)
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரமான செயல் விளக்கத்திற்காக இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், ஏனெனில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்குப் பிறகு விண்வெளியில் இணைக்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக இது திகழ்கிறது. இந்த மகத்தான சாதனையை அடைய கடுமையாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.