» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:22:51 PM (IST)

கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory