» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் நினைவு தினம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா மரியாதை|
சனி 18, ஜனவரி 2025 5:41:40 PM (IST)

பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 60-வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (18.01.2023) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் : பொதுவுடமை வீரர் ப.ஜீவா 21.08.1907-இல் பிறந்தார். தந்தையின் பெயர் பட்டன்பிள்ளை. தாயார் பெயர் உமையம்மை. இவரது இயற்பெயர் சொரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி தொடக்கப் பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்ற பின்னர், கோட்டாறு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். புரட்சிகரமான கொள்கை மற்றும் சமுதாயத்தொண்டால், இலக்கிய சேவையால், சுதந்திரப்போராட்ட தியாகத்தால் குமரிக்கு தனிப்பெருமை சேர்த்தவர் எனும் புகழுக்குரியவர் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் ஆவார்கள்.
1955-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு போராட்டத்தில் தீவிர பங்குபெற்ற, பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் 18.01.1963-ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். காலுக்கு செருப்பின்றி கால் வயிற்றுக்கு கூழுமின்றி பாழுக்கு உழைத்தோமடா பசையற்று போனோமடா என்று பாட்டாளி வர்க்கத்தின் பசிப்பிணியை உலகிற்கு பறைசாற்றியவர், பொதுவுடமை கருத்துக்களுக்கு சொந்தக்காரர் ப.ஜீவா. அன்னாரது 60-வது நினைவு நாளையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஜா.லெனின்பிரபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜவஹர், செல்வி.கௌசிகா, அன்னலெட்சுமி, ஸ்டாலின் பிரகாஷ், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்த், அரசு வழக்கறிஞர் மதியழகன், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை; வதந்திகளை நம்பாதீர்: தவெக திட்டவட்டம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:01:58 PM (IST)

பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள்: சட்டம் ஒழுங்கு சீரழிவு - பாஜக விமர்சனம்!
திங்கள் 16, மார்ச் 2026 3:57:30 PM (IST)

