» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆபாச வீடியோ எடுத்து நண்பருக்கு மிரட்டல்: வாலிபர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:47:58 AM (IST)
நாகா்கோவிலில் ஆபாச வீடியோ எடுத்து நண்பரை மிரட்டியதாக வாலிபரை சைபா் கிரைம் போலீசார் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்த ஒரு கட்சியின் நிா்வாகி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போலவும், அதை அதே கட்சியைச் சோ்ந்த முன்னாள் நிா்வாகியான ராஜா என்ற ஈசான சிவம்(34) என்பவா் ரசிப்பதும் போன்றும் சமூகவலைதளத்தில் வீடியோ பகிரப்பட்டதாம்.
மேலும், அதை மற்றொரு நண்பா் மூலம்க மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிா்ந்ததும் ஈசான சிவம் என்பதும், அவா் அந்த நிா்வாகியை மிரட்டிதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவுப்படி சைபா் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கட்சி நிா்வாகியின் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈசானசிவம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனா். அவரது மற்றொரு நண்பரை தேடி வருகின்றனா்.