» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!

புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)

மதுரையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகைகளை திருடிய துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 14.11.2024 அன்று இந்த வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் உத்தரவுப்படி ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் 2023-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வங்கியில் 9 நபர்கள் அடகு வைத்த 561.5 கிராம் (70 பவுன்) தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் வங்கி லாக்கரில் இல்லை.

ேமலும் வாடிக்கையாளர்கள் 9 பேர் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகைகள் மாயமாகி இருந்தது. நகைகள் காணாமல் போனது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, துணை மேலாளர் மழுப்பலான தகவல்களை கூறியுள்ளார்.

இதையடுத்து பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான், காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திதில் வங்கி மேலாளருக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை துணை மேலாளர் கணேஷ் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் மதுரை ஆனையூர் மல்லிகை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory