» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : கன்னியாகுமரியில் பரபரப்பு

வியாழன் 20, மார்ச் 2025 11:17:44 AM (IST)

இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து இன்று அதிகாலை மங்களூரு நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இரணியல் நிலையம் அருகே வந்தபோது, அங்கு ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பிறகு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory