» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி வீட்டை முடக்குவதா? பிரபு கைவிரிப்பு

வியாழன் 3, ஏப்ரல் 2025 5:41:03 PM (IST)

நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய கோரிய வழக்கில், ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்குவதா? என நடிகர் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவாஜி வீடு ஜப்தி நடவடிக்கையில் பிரபு உதவ மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அதற்கு, ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அவருடைய கடனை நீங்கள் செலுத்தலாமே? இப்போது ராம்குமார் செலுத்த வேண்டிய கடனை கொடுத்துவிட்டு பிறகு, அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.

ஆனால், அதனை நிராகரித்துவிட்ட பிரபு தரப்பு, ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உதவ முடியாது. ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக ரு.150 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்குவதா? தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடனாகப் பெற்றதில்லை. எனவே, ராம்குமாருக்கு உதவ முடியாது என சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory