» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராமேஸ்வரத்தில் புதிய பாலம், பாம்பன் எக்ஸ்பிரஸ் சேவை: ஏப்.6ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:35:16 AM (IST)



ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள  ரயில் பாலம் மற்றும் பாம்பன் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதற்கென ராமேஸ்வரத்தில் வருகிற ஏப்ரல் 06 அன்று நடைபெறும் விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேசுவரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய தினசரி ரயில் சேவையையும் அன்று தொடங்கி வைக்கிறார். 

தற்போது அந்த புதிய ரயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16104 தினசரி பிற்பகல் 3.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்று மறுநாள் அதிகாலை 3.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் பாம்பன் ரயில் வண்டி 16104 தினசரி மாலை 6.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 5.45 மணியளவில் ராமேசுவரம் வந்தடைகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory