» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக: ஹெச்.ராஜா ஆவேசம்

வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:54:10 PM (IST)

"இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக. அதனால் வரக்கூடிய 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முழுமையாக தமிழக மக்கள் திமுக கூட்டணியை புறக்கணிப்பார்கள். ” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று (ஏப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலுமாக வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் புறக்கணிப்பார்கள். 

திமுக கூட்டணி இந்துக்களுக்கு விரோதமான தீய சக்தி என்பதை தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். இந்து கோயில்களுக்கு அறநிலையத் துறையில் இருந்து மின் கட்டணம் செலுத்தாமல் கோயில் உண்டியலில் இருந்து மின் கட்டணம் செலுத்த யார் அனுமதி வழங்கியது? இது இந்து கோயில்களின் மீதான கொள்ளை அல்லவா?

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த அனைவரும் முழு இந்து விரோத தீய சக்திகள். தமிழகத்தில் பல இந்துக் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை வக்பு வாரிய சொத்துகள் என அபகரித்துள்ளனர். இதை ஒவ்வொரு இந்து மக்களும் புரிந்துள்ளனர். 

1995-ல் வக்பு வாரிய சட்டம் வந்தபோது வக்பு வாரியத்துக்கு சொந்தமாக இருந்த நிலம் 8 லட்சம் ஏக்கர். ஆனால் தற்போது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இந்துக்களின் சொத்துகளை, இந்து கோயில்களின் சொத்துக்களை அபகரிக்க ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது? இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக. 

நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத்தீவை தாரை வார்க்கும்போது கருணாநிதி போராடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த கச்சத்தீவை தாரை வார்ப்பதற்கு எதிராக போராடியது அப்போது இருந்த ஜன சங்க தலைவர்களே. தமிழ் உணர்வு கருணாநிதிக்கோ திமுகவுக்கோ இருக்கிறதா? தமிழ் மண்ணை தாரை வார்த்ததற்கு எதிராக போராடியது ஜன சங்கமும், பாரதிய ஜனதா கட்சியும் தான். ஆனால் நாங்கள் தமிழ் விரோத கட்சியென்று கூறுகிறார்கள்.

கச்சதீவை தாரை வார்க்கும்போது அதற்கு எதிராக பாஜக போராடியது. திமுக ஏன் போராடவில்லை என்பதை ஊர் ஊராக சொல்ல வேண்டும். எனவே, இவர்கள் தமிழ் சமுதாயத்தை வஞ்சிக்கிற ஒரு கூட்டம் என்று தெளிவாக தெரிகிறது. இவர்களின் தோல்விதான் தமிழ் சமுதாயத்தின் விடியலாக இருக்கும்.

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவாரா, தொடர்வாரா என்பது அகில இந்திய தலைமை முடிவு செய்யும். எனக்கு வழங்கப்பட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி ஆட்சிதான் வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

விஜய்யின் வீட்டை வக்பு வாரியம் கேட்டிருந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுவாரா? சட்டத்தைப் பற்றி தெரியாத, மக்கள் பிரச்சினை பற்றி தெரியாத ஒரு நடிகர் இதிலும் நாடகம் ஆடுகிறார். வெறும் சினிமாவில் நடிப்பதும் காசு சம்பாதிப்பதும் ஒரு தொழிலாக கொண்ட நடிகரான அவர், மிகப் பெரிய இந்து விரோத தீய சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வழக்குகள் உள்ளன. அவர் சிறைக்குச் செல்கின்ற நாள் தான் இந்துக்களுக்கான வெற்றி. உதயநிதி இந்து விரோத தீய சக்தி. இந்து விரோத கோமாளி ஆ.ராசா. இவர்கள் இருவரையும் சிறையில் அடைகின்ற காலம் வரும்,” என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory