» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு

வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:55:48 PM (IST)

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு, நிறைய பேசுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தமிழக பாஜக வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா நிறைவேறியது வரலாற்று வெற்றிச்சரித்திரம். வக்பு மசோதா ஏழை இஸ்லாமிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வக்பு மசோதாவால் அரசாங்க சொத்து நேர்மையான முறையில் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 39 லட்சம் ஏக்கர் சொத்துகள் உள்ளன. 2013க்கு பிறகு 2025 வக்பு மசோதா நிறைவேறியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத்தலைவர் தேர்வான பிறகு, நிறைய பேசுவோம். அதிமுக நிர்பந்தத்தால் நீங்கள் மாற்றமா என்ற கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை. என்னை பொருத்தவரை பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory